பொது செய்தி

இந்தியா

ஊரடங்கை பயன்படுத்தி 200 முக்கிய பணிகளை முடித்த ரயில்வே துறை

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement

புதுடில்லி: ரயில் பாதைகளை மின்மயமாக்குதல், இரட்டிப்பாக்குதல், பழைய பாலங்களை மறு சீரமைத்தல் போன்ற நீண்டகாலமாக கிடப்பில் இருந்த 200 முக்கிய திட்டங்களை ஊரடங்கு காலத்தில் நிறைவேற்றியுள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்னமும் தொடர்கிறது. இதன் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இது போன்ற அரிய வாய்ப்பினை பயன்படுத்தி ரயில்வே துறையானது நாடு முழுவதும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளை முடித்துள்ளது.

இதன் மூலம் 82 பாலங்கள் புனரமைப்பு, 48 லெவல் கிராசிங்குகளை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை, 16 நடை மேம்பாலங்களை கட்டியது, பழைய நடை மேம்பாலங்களை அகற்றுவதற்கான 14 திட்டங்கள், சாலை மேம்பால திட்டங்கள் 7, யார்டு மறுவடிவமைப்பு திட்டங்கள் 5 மற்றும் 26 பிற திட்டங்களை முடித்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதில் குறிப்பாக சென்னை டிவிஷனில் உள்ள ஜோலார்பேட்டையில் யார்டு மாற்றப்பட்டதால் ரயில் பாதையின் வேகம் 60 கி.மீ வரை மேம்பட்டுள்ளது. பெங்களூரு பயணத்தை இது எளிதாக்கும்.


latest tamil news



அதே போல் லூதியானா ரயில் நிலையத்தில் கைவிடப்பட்டு ஆபத்தான நிலையில் விளங்கிய 135 மீட்டர் நீளம் கொண்ட நடை மேம்பாலத்தை அகற்றியுள்ளனர். இதனை சவாலான பணியாக ரயில்வே கருதியது. இம்முயற்சி 2014 முதல் தாமதமாகி வந்தது. காரணம் இது 19 ரயில் பாதைகள், 7 பயணிகள் ரயில் மேடைகளின் ஊடாக சென்றது. இது போன்ற பல திட்டங்களை ஊரடங்கு வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
29-ஜூன்-202016:46:44 IST Report Abuse
Ray தமிழகத்தில் ரெண்டு ஒன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்பாதை பேண்டை நிமிர்த்தினார்கள் சென்னை யானை கவுனி மேம்பாலத்தை உடைத்து எடுத்தார்கள் சாதனைதான் ஏனெனில் இருபத்திநாலு மணிநேரமும் ரயில் போய்க்கொண்டே இருந்தால் எப்படி இந்த வேலைகளை செய்ய முடியும் கெட்டதில் நல்லது விளைந்தது
Rate this:
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
28-ஜூன்-202014:07:35 IST Report Abuse
Ramesh Sundram சென்னைக்கு அருகே உள்ள பெருங்களத்தூர் மேம்பாலம் இன்னும் வேலை ஆரம்பிக்க வில்லை மூன்றாவது ரயில் பாதை தாம்பரம் முதல் செங்கற்பட்டு வரை இன்னமும் முடிக்க வில்லை இந்த நல்ல சமயத்தை பயன் படுத்தி பெருங்களத்தூர் அருகே மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைத்து இருந்தால் நன்றாக இருக்கும் இப்பொழுது சென்னையில் போக்குவரத்து குறைவு சிறிது மாற்றம் செய்தாலே போதும்
Rate this:
Ray - Chennai,இந்தியா
29-ஜூன்-202016:52:14 IST Report Abuse
RayARE YOU IN GUDUVANCHERY?...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஜூன்-202012:56:25 IST Report Abuse
sankaseshan இதுதான் நிர்வாக திறமை .பாராட்டுக்கள் நந்தா, குமரா நீங்கள் நாட்டுக்காக தமிழகத்துக்காக எதை கிழித்தீர்கள் , சொல்லுங்கள் முதலில் . எல்லாவற்றிலும் கோணல் பார்வை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X