பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அறிவித்த நிவாரணம் எப்போது? கொரோனா பணி டாக்டர்கள் கோரிக்கை

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: 'கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, அரசு அறிவித்த, ஒரு மாத சம்பளம் மற்றும் நிவாரண நிதியை வழங்க வேண்டும்' என, அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.'கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள்,

சென்னை: 'கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, அரசு அறிவித்த, ஒரு மாத சம்பளம் மற்றும் நிவாரண நிதியை வழங்க வேண்டும்' என, அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.latest tamil news'கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரண தரப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால், 50 லட்சம் ரூபாய் நிதியுடன், வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில், மூன்று மாதத்திற்கும் மேலாக, டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். பலர், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனைகள், ஓட்டல்களில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அவர்களுக்கு, அரசு அறிவித்த நிவாரண நிதி, இதுவரை வழங்கப்படாதது, சுகாதார பணியாளர்களை சோர்வடைய வைத்துள்ளது


latest tamil news.இதுகுறித்து, அரசு டாக்டர்கள் சங்க தலைவர், செந்தில் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை, 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டு செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர். தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருபவர்களுக்கு, நம்பிக்கை தரும் வகையில், அரசு அறிவித்த நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூன்-202011:12:50 IST Report Abuse
Bhaskaran Muthal velayaaga avargal kurai theerkanum
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
28-ஜூன்-202010:48:13 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI உயிரை பணயம் வைத்து உழைக்கிறார்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை உடனே கொடுக்கவேண்டும் ஏன் தாமதம்
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
28-ஜூன்-202008:47:53 IST Report Abuse
B.s. Pillai The hard work of the Doctors and nurses and health workers during this emergency time is exemplary one. There should be no delay in fulfilling the promise from the Governement side.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X