அரசு அறிவித்த நிவாரணம் எப்போது? கொரோனா பணி டாக்டர்கள் கோரிக்கை| Covid-19: Doctors Association requests TN govt to announce relief fund | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அறிவித்த நிவாரணம் எப்போது? கொரோனா பணி டாக்டர்கள் கோரிக்கை

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (5)
Share

சென்னை: 'கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, அரசு அறிவித்த, ஒரு மாத சம்பளம் மற்றும் நிவாரண நிதியை வழங்க வேண்டும்' என, அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



'கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரண தரப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால், 50 லட்சம் ரூபாய் நிதியுடன், வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில், மூன்று மாதத்திற்கும் மேலாக, டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். பலர், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனைகள், ஓட்டல்களில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அவர்களுக்கு, அரசு அறிவித்த நிவாரண நிதி, இதுவரை வழங்கப்படாதது, சுகாதார பணியாளர்களை சோர்வடைய வைத்துள்ளது


latest tamil news



.இதுகுறித்து, அரசு டாக்டர்கள் சங்க தலைவர், செந்தில் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை, 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டு செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர். தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருபவர்களுக்கு, நம்பிக்கை தரும் வகையில், அரசு அறிவித்த நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X