கொரோனா தாக்கம் எதிரொலி: 65 வயது முதல் தபால் ஓட்டு| Voters above 65 years to be allowed to use postal ballot | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தாக்கம் எதிரொலி: 65 வயது முதல் தபால் ஓட்டு

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: கொரோனா வைரசின் தாக்குதலால், தபால் மூலம் ஓட்டளிப்பதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.நாட்டில், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்கள் தான், தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்யலாம் என, 2019ம் ஆண்டு அக்டோபரில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, தேர்தல் கமிஷன் பரிந்துரையின்படி, இந்த விதியில், சட்ட

புதுடில்லி: கொரோனா வைரசின் தாக்குதலால், தபால் மூலம் ஓட்டளிப்பதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.latest tamil news


நாட்டில், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்கள் தான், தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்யலாம் என, 2019ம் ஆண்டு அக்டோபரில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, தேர்தல் கமிஷன் பரிந்துரையின்படி, இந்த விதியில், சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், தபால் மூலம் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம்.


latest tamil news


கொரோனா வைரசால், 65 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவதால், அவர்களின் நலன் கருதி, இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவோரும், தபால் மூலம், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

விரைவில், பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் மூலம் ஓட்டளிப்பதற்கான வயதில் திருத்தம் செய்திருப்பதால், அம்மாநில மக்கள் முதலில் பயனடைவர். இந்த சட்டத் திருத்தத்தை, இந்த ஆண்டு இறுதி வரை அமலில் வைத்திருக்க வேண்டும் என, சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X