பொது செய்தி

தமிழ்நாடு

கீழே கிடந்த 'மாஸ்க்'கால் 5 பேருக்கு 'கொரோனா'

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வேலுார்: வேலுாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. காட்பாடி சிவராஜ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு கடந்த 22ல் கொரோனா உறுதியானது. வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு தொற்று பரவியது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் காட்பாடி
 கீழே கிடந்த 'மாஸ்க்'கால் 5 பேருக்கு 'கொரோனா'

வேலுார்: வேலுாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. காட்பாடி சிவராஜ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு கடந்த 22ல் கொரோனா உறுதியானது. வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு தொற்று பரவியது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில் 20 வயதான வாலிபர் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்துள்ளனர். அபராதம் விதிப்பர் என போலீசாருக்கு பயந்த வாலிபர் அங்கு கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார். ‍வீட்டிற்கு சென்ற ‍ அவரால் வீட்டிலிருந்த அவரது பெற்றோர், தம்பி, தங்கைக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற விபரம் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-ஜூன்-202000:26:10 IST Report Abuse
மலரின் மகள் மாஸ்க் எந்த தரத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் வெறும் சீ துரு துப்பட்டா துணியை கூட மாஸ்க் ஆக பயன்படுத்தலாம், பயன்படுத்திய மாஸ்க்கை எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கடைசி விட்டு செல்லலாம் அதற்கீல்லாம் எந்த வித தெண்டத்தொகையும் தரவேண்டாம். தவறுதலாகவோ அல்லது மறந்தோ மாஸ்க் அணியாமல் சென்று விட்டால் உடனடியாக அவர்களுக்கு லாபம் என்று அரசு அதிகாரிங்க வந்து தெண்டம் வசூலித்து விடுவார்களாம். அப்படியா. கொரநா பணியில் நாள் முழுவதும் காத்திருப்பது சில தெண்டங்களை வசூலித்து விடவேண்டும் என்பதற்காகவா? விழிப்புணர்வை கொணரவேண்டும். மாஸ்க் இல்லாதவர்களுக்கு மாஸ்க்கை ஸ்பாட்டிலேயே கூட கொடுத்து அதற்கான விலையை கூட பெற்று கொள்ளலாம் தவறில்லை. கேரளாவில் ஆங்காங்கே கைகழுவவதற்கு சோப் சொலுஷன் தண்ணீர் பந்தல் அமைத்தார்கள். அப்படி செய்தால் என்ன? வெளியில் செல்வோர் அனைவருமே தேவையில்லாமல் சம்பந்தமில்லாமல் சுற்றுகிறார்கள் என்று தவறான எண்ணங்களை வைத்திருக்கிறார்கள். லஞ்சம் என்ற ஒன்று இருக்கும் வரையில் கொரநா என்ற அரக்கன் நிலைத்து இருப்பான், அவன் பல்கி பெருகத்தான் செய்வான். கோரானாவிற்கு எதிரான போராட்டத்தில் முதல் படி லஞ்சத்தை ஒழிக்கவேண்டும். வெளிப்படையான கணyக்கு வழக்குகள் இருக்காது நமது அரசியலில். ப்ளீச்சிங் பவுடன் தெஇல்லத்ததாக எட்டு லட்சம் கணக்கு காண்பித்தர்களாமே ஒரு கிராம பஞ்சாயத்தில் அப்படியா?
Rate this:
Cancel
28-ஜூன்-202014:47:55 IST Report Abuse
நக்கல் எல்லோருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள்.. உங்கள் பழைய முக கவசம் அல்லது கையுரையை தூக்கிப்போடும் போது அவைகளை கிழித்து குப்பை தொட்டியில் போடுங்கள்.. இல்லையென்றால் அது யாரையாவது பாதிக்க வாய்ப்புள்ளது...
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
28-ஜூன்-202013:21:35 IST Report Abuse
Apposthalan samlin இப்படி பட்ட மக்கள் இருக்கிறதினால் தான் காரோண தாண்டவமாடுகிறது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X