பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' பொம்மையுடன் கொரோனா சேவை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 'மாஸ்க்' பொம்மையுடன் கொரோனா சேவை

மதுரை:கொரோனா காலத்தில்முகக்கவசமின்றி நடமாடும் மக்களிடம் 'மாஸ்க்' அணிவிக்கப்பட்ட கரடி பொம்மையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்துகிறார் மதுரை சமூக ஆர்வலர் அசோக்குமார்.

மதுரை செனாய் நகரில்மினரல் வாட்டர் கேன் வியாபாரம் செய்யும் இவர் 'இதழ் தானம்' என்ற பெயரில் பிறரிடம் புத்தகங்களை பெற்று பள்ளி, கல்லுாரி, நுாலகங்களுக்கு வழங்கி வருகிறார்.

அசோக்குமார் கூறியதாவது: கொரோனாவை எதிர்க்கும் முக்கிய கவசம் முகக்கவசம் என்பதை சிலர் புரிந்து கொள்வதில்லை. அரசும், டாக்டர்களும் கூறியும் அணியாதவர்கள் நான் சொல்லியா அணிய போகிறார்கள். சாதாரணமாக சொன்னால் மதிப்பிருக்காது என்பதால் கரடி பொம்மைக்கு முகக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். உழவர் சந்தை, ரேஷன் கடைகள், அம்மா உணவகங்கள் என மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற செய்வது, முகக்கவசம் அணிய சொல்வது, கபசுர குடிநீர் தருவது போன்ற சேவைகளை செய்கிறேன்.கடைகளில் வரிசையில்நிற்கமுடியாத முதியவர்கள், நோயாளிகளுக்காக நான் நின்று பலசரக்கு, மாத்திரைகள் வாங்கி தரும் சேவையும் செய்கிறேன், என்றார்.

இவரை வாழ்த்த 91718 70007.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X