தமிழ்நாடு

கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் கத்தியா, புத்தியா...? அதிகார வர்க்கம் திகைப்பு; மக்களோ பரிதவிப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கொரோனா தொற்றுக்கு எதிராக கத்தியை எடுப்பதா அல்லது புத்தியை எடுப்பதா? என்று தெரியாமல், அதிகாரம் வர்க்கம் திகைத்துள்ள நிலையில், மக்களின் நிலையோ பரிதவிப்பில் சிக்கியுள்ளது.


'போன மச்சான் திரும்ப வந்தான் பூ மணத்தோடு' என்ற பழமொழி கணக்காக, ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா, மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா அடங்கியிருந்த போது, ஊரடங்கில் தளர்வு தரப்பட்டது. ஆனால், கொரோனாவின் பாய்ச்சல், பலி என அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளதால், மாவட்ட நிர்வாகமும், கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மண்டலத்துக்குள் மண்டலம் என்ற தளர்வு, கடந்த சில நாளாக, மாவட்டத்துக்குள் மட்டுமே என்று குறுகியுள்ளது. இதனால் ஒற்றை சாலையை கடந்தால், அடுத்த மாவட்டத்துக்கு செல்லலாம் என்பதற்கு கூட, இ-பாஸ் பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இ-பாஸ் பெறுவதும், அவ்வளவு சுலபமாக இல்லை. இதனால் மாவட்ட எல்லைகளில் வசிக்கும், ஈரோடு மாவட்ட தொழிலாளர்கள், மக்களின் வாழ்வாதாரம், மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: கடந்த இரு நாட்களாக ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதியான கருங்கல்பாளையம், நொய்யல், விஜயமங்கலம், பவானி லட்சுமி நகர் செக்போஸ்ட்களில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாத வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்புகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் இருந்து, தினந்தோறும் ஈரோடு மாநகருக்கு வேலைக்கு, ஏராளமானோர் வருகின்றனர். தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் விண்ணப்பித்தாலும் சில மணி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக வருகிறது. இ-பாஸ் பெறுவதில் சிரமம் உள்ளது. இதனால் அன்றாட பணிகளுக்கு வர முடியாமல், மாவட்ட எல்லைகளில் வசிக்கும் தொழிலாளர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளோம். இ-பாஸ் பெறுவதை எளிமைப்படுத்தி, வாழ்வாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்: கலெக்டர் கதிரவன், அரசு மருத்துவமனை ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு, அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் பகுதிகளில், நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். முகக்கவசம் அணியாத டூவீலர் ஓட்டிகள், லாரி, கார், வேன் டிரைவர்களுக்கு, தலா, 100 ரூபாய் அபராதம் விதித்தார். அதையடுத்து சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள கடைகள், ஓட்டல்களில் ஆய்வு செய்தார். மாஸ்க் அணியாமல் வந்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட, 10 பேரிடம் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மதியம் திருப்பி வழங்கப்பட்டது.

பாச்சா பலிக்குமா? கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திலிருந்து டூவீலர், கார், ஆட்டோக்களில், இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை, போலீசார் நேற்று திருப்பி அனுப்பினர். இதனால் வேலைக்கு செல்ல முடியாத சில இளைஞர்கள், பள்ளிபாளையம் சென்றனர். அங்கிருந்து, வேன், லாரி மற்றும் ஜவுளி வாகனம், விசைத்தறி கூட வாகனங்களில் ஏறி, ஈரோட்டுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அடையாளம் கண்ட போலீசார். 'எங்களிடமே பாச்சா காட்டுவதா?' எனக்கூறி வாகனங்களில் இருந்து இறக்கி விட்டு, வாகனத்தை மட்டும் ஈரோட்டுக்குள் அனுமதித்தனர்.

செக்போஸ்டில் 'டெஸ்ட்': நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்து, கருங்கல்பாளையம் வழியாக, ஈரோட்டில் நுழையும் வாகனங்களை, வாகன ஓட்டிகளை, செக்போஸ்ட் போலீசார் தீவிரமாக சோதிக்கின்றனர். இ-பாஸ் இருந்தாலும், உடல் நலம் குன்றியவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும், பி.சி.ஆர்., டெஸ்ட் எடுக்கின்றனர். தெர்மல் ஸ்கேனரில் நார்மலாக இருந்தால் மட்டுமே, மாநகரில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று சேலத்தில் இருந்து வந்த, ??க்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர்., டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. தெர்மல் ஸ்கேனரில், 100 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை இருந்த, நான்கு பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X