ஊரடங்கிலும் போராட்டத்துக்கு அனுமதி: போலீசார் அதிர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கிலும் போராட்டத்துக்கு அனுமதி: போலீசார் அதிர்ச்சி

Added : ஜூன் 28, 2020
Share

ஈரோடு: கொரோனா ஊரடங்கு காலத்திலும், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, ஈரோடு மாவட்ட போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோவில்களை திறக்க கோரியும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, மின்சாரம் தொடர்பான பிரச்னைகள், நிவாரண தொகை கோரி, அரசியல் கட்சி பிரமுகர் மீது, நடவடிக்கை கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில், சமீபமாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. கொரோனா நோய் தொற்று வேகமாக பரவும் நிலையில், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தேவையா? ஆர்ப்பாட்டங்களுக்கு வருவோர் கூட்டமாக வருகின்றனர். டீக்கடை, ஓட்டல்களுக்கு செல்கின்றனர். அப்புறம் எப்படி தொற்று பரவாமல் இருக்கும்? கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழலில், உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது ஆச்சர்யமக உள்ளது. வரும் நாட்களிலாவது, ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்வு செய்யப்படும் வரை ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X