பொது செய்தி

தமிழ்நாடு

மூழ்கப்போகும் ஆட்சியை நம்பாதீர்கள்: அரசு அதிகாரிகளுக்கு எம்.பி., எச்சரிக்கை

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோபி: ''அடுத்த தேர்தலில், தி.மு.க., ஆட்சிக்கு வரும். மூழ்கப்போகும் ஆட்சியை நம்பி, அதிகாரிகள் சட்ட விரோதமாக நடந்து கொள்ள வேண்டாம்,'' என்று, திருப்பூர், இ.கம்யூ.,- எம்.பி., சுப்பராயன் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் நம்பியூரில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், திருப்பூர் எம்.பி., சுப்பராயன், நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிகார துஷ்பிரயோகம் அதிகரித்து வருகிறது. சட்ட மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையை, தங்களுடையதாக, அ.தி.மு.க.,வினர் மாற்றி கொண்டுள்ளனர். அதாவது முறைகேடுகளை முறையாக மாற்றியுள்ளனர். இதற்கு உதாரணமாக, டி.என்.,பாளையம் யூனியன் தேர்தலை கூறலாம். ஏழு கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற, தி.மு.க., தோற்றுள்ளது. மூன்று கவுன்சிலரை கொண்ட, அ.தி.மு.க., யூனியன் தலைவர் பதவியை பிடித்துள்ளது. ஏழு கவுன்சிலர்களை நிராகரித்து, மூன்று கவுன்சிலர்களை கொண்டு தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இது சகித்துக்கொள்ள முடியாத, ஜனநாயக விரோதம். கோபி தொகுதியில், கள்ளச்சாராய விற்பனையில், நம்பியூர் யூனியன் தலைநகராக உள்ளது. குருமந்தூர் குளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுத்தவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க., என்ற கட்சி மூழ்கி கொண்டிருக்கும் படகு. அதில் ஏறினால் கரை சேர முடியாது. அடுத்த தேர்தலில், தி.மு.க., ஆட்சிக்கு வரும். மூழ்கப்போகும் ஆட்சியை நம்பி, அதிகாரிகள் சட்ட விரோதமாக நடந்து கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் ஸ்டேஷனில் புகார்: நம்பியூர் யூனியன், எலத்தூரில் குளம் தூர்வாரும் பணியை, எம்.பி., சுப்பராயன் நேற்று பார்வையிட்டார். பின் நம்பியூரில், முறைகேடாக மது விற்பனை நடப்பது குறித்து முறையிட, நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் இல்லை. இதனால் எஸ்.ஐ., ராஜமாணிக்கத்திடம் தெரிவித்தார். எஸ்.பி.,யிடம் பேசி வலியுறுத்துவேன் என கூறிவிட்டு புறப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-ஜூன்-202006:39:47 IST Report Abuse
skv srinivasankrishnaveni மூழ்கிப்போயிட்டாகட்ச்சிக்காரனுக ஒப்பாரியைப்பாருங்கடா கொள்ளை அடிச்சுப்பல லக்ஷமகோடிகள் வச்சுட்டுபூட்டாருமுக தானே தலைவன் திமுகவும் தனதே தமிழ்நாடும் தனக்கே சொந்தம் என்று அப்பாவும் பிள்ளையும் ஆடின்னு கிடக்குறாங்க இந்தகொசுறு எல்லாம் எப்படிபேசுதுங்கய்யா பாருங்க மக்களே அறிவுடன் இருந்தால் உங்களுக்கு கொஞ்சமாச்சும் மிஞ்சும் இல்லேன்னா எல்லாம் சுவாஹா பாணனை காத்துனருக்கானுக ரெண்டு கழகம்களும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X