பொது செய்தி

தமிழ்நாடு

காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறப்பு: பொதுப்பணித்துறை அரசுக்கு பரிந்துரை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஈரோடு: காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக நீர் திறக்க, பொதுப்பணித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காளிங்கராயன் அணைக்கட்டு மூலம், 15 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. காளிங்கராயன் வாய்க்காலில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 16ல் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட வேண்டும். நடப்பாண்டு வாய்க்காலில் பராமரிப்பு பணி நடப்பதால், வழக்கமான தேதியில் திறக்க முடியவில்லை. பணியை விரைந்து முடித்து, உரிய நேரத்தில் நீர் திறந்து விட்டால் மட்டுமே, சாகுபடியை துவங்க முடியும். அல்லது மழை காலத்தில் பயிர் பாதிக்கும் அபாயம் ஏற்படும், என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பவானிசாகர் அணையில் தற்போது நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. பருவமழை கேரளாவில் துவங்கி உள்ளதாலும், தமிழகத்தில் சில இடங்களில் அதற்கான சூழல் உள்ளதால், ஜூலை, 1ல் பாசனத்துக்கு நீர் திறக்கலாம் என, பொதுப்பணித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X