பொது செய்தி

தமிழ்நாடு

பொது கிணற்றை காணவில்லை: பிளக்ஸ் பேனரால் பரபரப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

பவானி: பவானி அருகே, குருப்ப நாயக்கன்பாளையம் ஊராட்சி, மேட்டூர்- பவானி சாலை செல்கிறது. இந்த இடத்தில் இருந்த பொதுக்கிணறு எங்கே? ஊராட்சிக்கு உட்பட்ட கிணறு விற்கப்பட்டதா? விற்றவர் யார்? வாங்கியவர் யார்? என்று, பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: போர்வெல் வரும் முன்பு, 25, 30 ஆண்டுகளுக்கு முன், கிணறுகளே மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக இருந்தது. இப்பகுதியில் இதுபோல் பல கிணறுகள் இருந்தன. தண்ணீர் வற்றிய நிலையில், பராமரிப்பும் இல்லாததால், முட்புதர் சூழ்ந்து இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டன. இதுபோன்ற கிணறுகளை கண்டுபிடித்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, ஊராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் பலனில்லை. இதனால்தான் குருப்பநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தத்தில், கிணறுகளை காணவில்லை என்று, தமிழரசன் என்பவர் பிளக்ஸ் வைத்துள்ளார். மாவட்ட நிர்வாகம், இப்பகுதியில் உள்ள கிணற்றை, தூர்வாரி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X