வாக்கி-டாக்கிக்கு கூடுதல் பாட்டரி வேண்டும்: ஈரோடு மாவட்ட போலீசார் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்கி-டாக்கிக்கு கூடுதல் பாட்டரி வேண்டும்: ஈரோடு மாவட்ட போலீசார் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 28, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், போலீசாரின் தகவல் பரிமாற்றத்துக்காக, வாக்கி-டாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் முதல் எஸ்.பி., வரையிலான அதிகாரிகளுக்கு, வாக்கி-டாக்கியில் பயன்படுத்திக்கொள்ள, கூடுதலாக ஒரு பாட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ.,களுக்கு தராததால், பாட்டரியை சார்ஜ் செய்ய கூட நேரமின்றி அவதியுற்று வருவதாக, வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: உயர் அதிகாரிகள் வாக்கி-டாக்கியில் அழைக்கும்போது, உடனடியாக பேசவில்லையேல், தண்டனை கொடுக்கப்படும். இதனால் பாட்டரியை சார்ஜ் செய்ய கூட நேரமில்லை. மாவட்டத்தில், 105 க்கும் மேற்பட்ட வாக்கி டாக்கிகளில், பாட்டரிகளில் சார்ஜ் நிற்பதில்லை. நீண்ட நாட்களாக ஒரே பாட்டரி பயன்படுத்துவதே இதற்கு காரணம். கூடுதலாக ஒரு பாட்டரி வழங்கினால், பாட்டரிகளின் ஆயுட்காலம் நீடிக்கும். அதிகாரிகளிடம் கேட்டால், அமேசானில் ஆர்டர் போட்டு வாங்கி கொள்ளுமாறு கூறுகின்றனர். கொரோனா ஊரடங்கால், தற்போது வாக்கி-டாக்கி, 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கிறது. இதனால் பாட்டரி தாக்குபிடிக்காமல் அடிக்கடி வாக்கி-டாக்கி ஆப் ஆகிறது. எங்களுக்கும் கூடுதலாக ஒரு பாட்டரி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X