காதலுக்கு உறவினர் எதிர்ப்பு: விஷம் குடித்த வாலிபர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலுக்கு உறவினர் எதிர்ப்பு: விஷம் குடித்த வாலிபர் சாவு

Added : ஜூன் 28, 2020
Share

அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், விஷம் குடித்த வாலிபர் இறந்தார். அம்மாபேட்டையை அடுத்த பி.கே.புதூர், கண்ணபள்ளி, வெங்கட்டரெட்டியூரை சேர்ந்தவர் தங்கவேல், 25; அதே பகுதியில் ஜல்லி கிரஷரில் ஆப்பரேட்டராக வேலை செய்தார். உறவுக்கார பெண்ணை காதலித்தார். ஆனால், அவர்களின் உறவினர்கள், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மனமுடைந்த தங்கவேல், சில நாட்களுக்கு முன் விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X