உத்தர பிரதேச பாஜ., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
UP, BJP MLA, CoronaVirus, MLA, Devmani Dwivedi, Tests Positive, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, உபி, பாஜ, பாஜக, எம்எல்ஏ, கொரோனா, வைரஸ், பாதிப்பு

சுல்தான்பூர்: உ.பி.,யில் பா.ஜ., எம்எல்ஏ.,வுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. சில கட்சி எம்.எல்.ஏ.,க்களும் கொரோனா பிடியில் சிக்குகின்றனர். டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார். தமிழகத்தில் திமுக., எம்எல்ஏ அன்பழகன் கொரோனாவால் உயிரிந்தார், அக்கட்சியின் மேலும் ஒரு எம்எல்ஏ.,க்கும், அதிமுக எம்எல்ஏ ஒருவருக்கும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலம் ஜாவாத் தொகுதியைச் சேர்ந்தவர் பாஜ., எம்எல்ஏ சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.


latest tamil news


இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தின் லம்புவா தொகுதி பாஜ., எம்எல்ஏ.,வான தேவ்மானி திவேதிக்கு கொரோனா பரிசோதனையில் பாசிடிவ் வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது சகோதரர் சிந்தாமணி கூறுகையில், ‛சில நாட்களுக்கு முன்பு, தேவ்மானி திவேதி உடல்நிலை மோசமடைந்து, லக்னோவின் சதர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தோம். கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். சோதனையில் பாசிடிவ் வந்ததால் சிகிச்சைக்காக கே.ஜி.எம்.யு.,வுக்கு மாற்றப்பட்டார்,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X