சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலியுடன் கணவன் மாயம்: போலீசில் மனைவி முறையீடு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
ஈரோடு: காதலியுடன் மாயமான கணவனை கண்டுபிடித்து தருமாறு, வீரப்பன்சத்திரம் போலீசில், மனைவி புகார் செய்தார். திண்டல், செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் சுசீந்திரன், 25, கூலி தொழிலாளி. இவரின் மனைவி ராமாயி, 25; இருவருக்கும் கடந்த மார்ச், 12ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன் தீபிகா, 24, என்பவரை சுசீந்திரன் காதலித்தார். இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிந்தது. ஆனால், திருமணத்துக்கு

ஈரோடு: காதலியுடன் மாயமான கணவனை கண்டுபிடித்து தருமாறு, வீரப்பன்சத்திரம் போலீசில், மனைவி புகார் செய்தார். திண்டல், செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் சுசீந்திரன், 25, கூலி தொழிலாளி. இவரின் மனைவி ராமாயி, 25; இருவருக்கும் கடந்த மார்ச், 12ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன் தீபிகா, 24, என்பவரை சுசீந்திரன் காதலித்தார். இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிந்தது. ஆனால், திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில்தான் பெற்றோர் பார்த்த ராமாயுடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக, மனைவியிடம் கூறிவிட்டு சென்ற சுசீந்திரன், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் முன்னாள் காதலியுடன், கணவன் ஓட்டம் பிடித்து விட்டதாக, வீரப்பன்சத்திரம் போலீசார் ராமாயி புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X