சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோட்ட மின்வேலியில் சிக்கி 2 தொழிலாளி பலி: சத்தி அருகே அடுத்தடுத்த சம்பவத்தால் பகீர்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் அருகே, தோட்டத்து மின் வேலியில் சிக்கி, இரண்டு தொழிலாளிகள் அடுத்தடுத்து பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, பெலரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர், 19 பேர், சத்திய மங்கலம் அருகே உள்ள புதுக்கலையனூர் பகுதியில், ஒரு விவசாய தோட்டத்தில் தங்கி, கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் காலை தொழிலாளர்கள் லிங்கேஷ், முத்துக்குமார், அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றனர். காட்டுப்பன்றிகள் புகுவதை தடுக்க, வயல் வெளி பகுதியில் வேலி அமைத்து, மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்தது. இது தெரியாமல், வேலியை கடக்க முற்பட்ட லிங்கேஷ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். அதிர்ச்சியடைந்த முத்துக்குமார், அவரை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர், லிங்கேஷை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். சத்தி போலீசார், லிங்கேஷ் உடலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் பாய்ச்சிய விவசாயி நடராஜ் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மற்றொரு சம்பவம்: கோபி, வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40, விவசாய கூலி தொழிலாளி. சத்தி அருகே ராமாபுரம் கிராமத்தில், ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை, 8:00 மணியளவில், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்கு சென்றார். மரவள்ளிக்கிழங்கு பயிரை காட்டுப்பன்றிகள் சேதம் செய்யாமல் இருக்க, மின் வேலி அமைத்து, உயரழுத்த மின்சாரம் பாய்ச்சியது தெரியாமல், கிருஷ்ணமூர்த்தி மின்வேலியில் சிக்கி பலியானார். சத்தி போலீசார் விசாரணையில், தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி, 52, சட்டவிரோதமாக விவசாய பயன்பாட்டுக்கான மின்சாரத்தை, மின்வேலியில் பாய்ச்சியது தெரியவந்தது. ரங்கசாமியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X