பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

சங்ககிரி: சங்ககிரி, கோனேரிப்பட்டி ஊராட்சி, வெள்ளாளபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், மொபைல் போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், சங்ககிரி தாசில்தார் அலுவலகத்தில், சில நாளுக்கு முன் மனு கொடுத்தனர். இந்நிலையில், நேற்று, அப்பணிக்கு லாரியில் இருந்து பொருட்களை ஏற்றி வந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள், வெள்ளாளபாளையத்தில் இருந்து, கோபுரம் அமைக்க செல்லும் சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். தேவூர் போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், பொருட்கள் ஏற்றி வந்த லாரியை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதனால், மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X