மருத்துவ அலுவலர் உள்பட 32 பேருக்கு கொரோனா: ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்| Dinamalar

தமிழ்நாடு

மருத்துவ அலுவலர் உள்பட 32 பேருக்கு 'கொரோனா': ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

Added : ஜூன் 28, 2020
Share

ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், மருத்துவ அலுவலர், செவிலியர், கர்ப்பிணி என, 32 பேருக்கு 'கொரோனா' தொற்று உறுதியானது. இதனால், ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், ஆரியபாளையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 30 வயது மருத்துவ அலுவலர், 30 வயது ஆண் செவிலியர், 40, 34 வயது பெண் செவிலியர்கள், 34 வயது பெண் மருத்துவ உதவியாளர் என, ஐந்து பேருக்கு, நேற்று, 'கொரோனா' தொற்று உறுதியானது. ஆரம்ப சுகாதார நிலையம் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. அதேபோல், களரம்பட்டியைச் சேர்ந்த, 42 வயது லாரி உரிமையாளருக்கு, கடந்த, 22ல் தொற்று உறுதியானது. நேற்று, அவரது, 30 வயது மனைவி, 10 வயது மகள், ஏழு வயது மகன், 65 வயது தந்தை, 60 வயது தாய் என, ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், பெத்தநாயக்கன்பாளையம், எட்டாவது வார்டு, 28 வயது கர்ப்பிணி, தளவாய்பட்டி, 60 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியானது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் மட்டும், 12 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

* ஆத்தூர் வட்டாரத்தில், மும்பையில் இருந்து வந்த அப்பமசமுத்திரம், 28, 26 வயது பெண்கள், ஆறு, இரண்டு வயது பெண் குழந்தைகள், மத்தியபிரதேசத்தில் இருந்து வந்த ரிக் வண்டி தொழிலாளிகளான, பைத்தூர், 40 வயது ஆண், கீரிப்பட்டி, 40, 45 வயது ஆண்கள்; அரசநத்தம், 29 வயது நிறைமாத கர்ப்பிணி, நரசிங்கபுரம், குறிஞ்சி நகர், 50 வயது ஆண் என, ஒன்பது பேருக்கு, நேற்று, 'கொரோனா' உறுதியானது. அவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


* தம்மம்பட்டி, நாகியம்பட்டி ஊராட்சி, உப்புஓடை புதூரில், 58 வயது ஆண், 14, 17 வயது சிறுவர்கள் என, மூவருக்கு, நேற்று, 'கொரோனா' ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், கொடியூரைச் சேர்ந்த, 24 வயது ஆண், அவரது, 19 வயதுடைய, ஏழு மாத கர்ப்பிணி, கெங்கவல்லி அருகே, கடம்பூரில், செங்கல் சூளைக்கு பணிக்கு வந்தனர். அவர்களுக்கும், தொற்று உறுதியானது. தெடாவூரைச் சேர்ந்த, 38 வயது ஆண், மதுரை, ஆரப்பாளையத்தில் இருந்து வந்தார். அவருக்கும் தொற்று உறுதியானது. கெங்கவல்லி வட்டாரத்தில், ஆறு பேருக்கு தொற்று ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


* தலைவாசல் அருகே, லத்துவாடியைச் சேர்ந்த, 49 வயது ஆண், 13 வயது சிறுவர், கிழக்குராஜாபாளையம், 27 வயது ஆண், வெள்ளையூர், 25 வயது கர்ப்பிணி என, நான்கு பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது.


* காரிப்பட்டி, உடையாப்பட்டியைச் சேர்ந்த, தனியார் நிறுவன மருந்தக விற்பனையாளரான, 34 வயது ஆண், இரு நாளுக்கு முன், ஈரோடு சென்று வந்தார். அவருக்கு, மருத்துவ பரிசோதனை செய்ததில், நேற்று தொற்று உறுதியானது. ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் மட்டும், ஒரே நாளில், 32 பேருக்கு தொற்று உறுதியானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X