பொது செய்தி

தமிழ்நாடு

'அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை அதிகரிப்பு'

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

சேலம்: ''சேலம் அரசு மருத்துவமனையில், மூன்று மாதத்தில், கிட்டத்தட்ட, 3,000 கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்துள்ளது,'' என, டீன் பாலாஜிநாதன் கூறினார்.
சேலம் மாவட்டத்தில், 'கொரோனா' பாதிப்பால், தனியார் மருத்துவமனைகளில், பிரசவம் பார்ப்பது அறவே குறைந்துவிட்டது. இதனால், சேலம் அரசு மருத்துவமனைக்கு, சேலம் மட்டுமின்றி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணியர், பிரசவத்துக்கு அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச்சில், 868 கர்ப்பிணி, ஏப்ரலில், 977, மே, 1,082 பேர் பிரசவித்துள்ளனர். அதில், பெரும்பாலும் சுகப்பிரசவம் மூலம், குழந்தையை ஈன்றெடுத்து, தாய் - சேய் நலமுடன் உள்ளனர். இதுகுறிதது, டீன் பாலாஜிநாதன் கூறியதாவது: தொற்றால் தனியார் மருத்துவமனைகளில், தற்போது பிரசவம் பார்ப்பதில்லை. அதனால், அரசு மருத்துவமனைக்கு, கர்ப்பிணியர் வருகை அதிகரித்துள்ளது. நவீன மருத்துவ உபகரணங்கள், அனுபவம் வாய்ந்த பிரசவ மருத்துவ குழுவினர் ஒருங்கிணைப்புடன், கிட்டத்தட்ட, 3,000 கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு பின், பிரசவ சிகிச்சை தொடர்கிறது. தொற்று உறுதியானால், அவர்களுக்குரிய பிரத்யேக வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய குடும்பநல அமைச்சகம், தேசிய தர பிரசவ மற்றும் குழந்தைகள் பராமரிப்பு துறை சார்பில், குழு ஆய்வு செய்து, சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவ சிகிச்சை சேவைக்கு, பிளாட்டினம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X