பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் ஜி.ஹெச்.,ல் குணமடைந்த முதல் நபர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில், தொற்றில் இருந்து குணமடைந்த முதல் நபர், வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆத்தூர் அரசு மருத்துவமனையில், தொற்றால் பாதிக்கப்பட்ட, 46 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த, 17ல், ஈச்சம்பட்டியைச் சேர்ந்த, 24 வயது ஆண், தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவர், நேற்று முன்தினம் குணமடைந்தார். நேற்று, தலைமை மருத்துவ அலுவலர் கண்ணன்(பொ) தலைமையில் மருத்துவ குழுவினர், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, பழங்கள் கொடுத்து அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து, மருத்துவர்கள் கூறியதாவது: குணமடைந்தவருக்கு, அலோபதி சிகிச்சையுடன், இயற்கை மருத்துவர் மூலம் மன அழுத்தம் குறைக்க தியானம், யோகா, உடற்பயிற்சி கொடுத்து, மூலிகை, 'டீ' வழங்கப்பட்டது. சித்த மருத்துவ பிரிவு சார்பில், கபசுர குடிநீர், ஆடாதோடா சாறு போன்றவை வழங்கப்பட்டன. வீடு திரும்பும்போது, அமுக்கரா மாத்திரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி, அப்பகுதி மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X