கடைகளை கண்காணிக்க சிறப்பு குழு: விதிமீறினால் சீல் வைக்க நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளை கண்காணிக்க சிறப்பு குழு: விதிமீறினால் 'சீல்' வைக்க நடவடிக்கை

Added : ஜூன் 28, 2020
Share

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், விதிமீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில், தொற்று நோய் தடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்., 16 முதல், பொதுவெளியில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறிய, 72 ஆயிரத்து, 58 பேரிடமிருந்து, 61.73 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலை தடுக்க, அனைத்து வகை கடைகளிலும், தமிழக அரசு வெளியிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கை கழுவ வசதி, சானிடைசர், முகக் கவசம் கட்டாயம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். பணியின்போது, கட்டாயம் முகக் கவசம், கையுறை அணிய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதி பணியாளர்களை, பணியில் அமர்த்தக்கூடாது. வாடிக்கையாளர் பயன்படுத்தும் நாற்காலி, படிக்கட்டு, லிப்ட் உள்ளிட்ட அனைத்தையும் கிருமிநாசினியால் தூய்மைப்படுத்த வேண்டும். பணியாளர்கள், தங்களுக்குள் உணவு, நீர், பாத்திரம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும்போது எச்சரிக்கை அவசியம். இந்த விதிகளை கண்காணிக்க, மாநகராட்சி அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆய்வின்போது, விதிமீறி செயல்படுவது கண்டறியப்பட்டால், கடையை மூடி சீல் வைத்து, போலீஸ் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X