பொது செய்தி

தமிழ்நாடு

16 கண் மதகு பகுதியில் செத்து மிதந்த மீன்கள்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை, 16 கண் மதகு பகுதிகளில், மீன்கள் செத்து மிதந்ததால், கரையோர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 12ல் நீர்மட்டம், 101.73 அடி. நீர்இருப்பு, 67.10 டி.எம்.சி.,யாக இருந்தது. அன்று, டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால், நேற்று, அணை நீர்மட்டம், 92.96 அடி, நீர் இருப்பு, 56.09 டி.எம்.சி.,யாக சரிந்தது. இந்நிலையில், அணை உபரி நீர் வெளியேற்றும், 16 கண் மதகு பகுதிகளில், ஆங்காங்கே மீன்கள் கூட்டம், கூட்டமாக செத்து மிதந்தன. ஆலை கழிவுநீர் கலந்ததா, மர்மநபர்கள் நீரில் தோட்டா போட்டதால் செத்து மிதந்ததா என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X