சிறப்பு ரயிலில் 115 டன் பால் திமாபூருக்கு அனுப்பிவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ரயிலில் 115 டன் பால் திமாபூருக்கு அனுப்பிவைப்பு

Added : ஜூன் 28, 2020
Share

சேலம்: சேலத்திலிருந்து, திமாபூர் அசாம் ரைபிள் படை பிரிவுக்கு, 115 டன் பால், ரயில் மூலம் அனுப்பப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலத்திலிருந்து, நாகாலாந்து மாநிலம், திமாபூர் அசாம் ரைபிள் படை பிரிவுக்கு, சேலம் ஆவின் மூலம், 115 டன் பால், நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. டெட்ரா பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட பால், லாரிகள் மூலம், சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டு, ஐந்து வேகன்கள் அடங்கிய சிறப்பு ரயிலில் ஏற்றப்பட்டது. இதன் மூலம், 7.6 லட்சம் ரூபாய், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. முன்னதாக, சுமைதூக்கும் பணியாளருக்கு காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினியால் கைகளை சுத்தப்படுத்தல், முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு ரயில் மூலம் சரக்கு அனுப்ப விரும்புவோர், வணிக ஆய்வாளர்களை, கோவை பகுதியைச் சேர்ந்தவர், 90039 56955, திருப்பூர், 96009 56238, ஈரோடு, 96009 56231, சேலம் பகுதியைச் சேர்ந்தவர், 90039 56957 என்ற எண்களில் அழைக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X