பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.50 லட்சம் நிவாரணம்: வருவாய்த்துறை முறையீடு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

சேலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் குமரேசன், செயலர் முருகையன், சேலத்தில், நேற்று, முதல்வர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கிய மனு:கொரோனா பரவல் தடுப்பு பணி, நிவாரணப் பொருள் வழங்கல், புலம்பெயர்ந்த தொழிலாளருக்கு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பணிகளில், வருவாய், பேரிடர் மேலாண் துறை அலுவலர்கள், உயிரை பொருட்படுத்தாமல் ஈடுபட்டுள்ளனர். அதனால், அலுவலர் பலருக்கு, தொற்று உண்டாகி, உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி, தொட்டியம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் சேகர், கொரோனா பணியின் போது, கடந்த மே, 21ல் உயிரிழந்தார். ஏற்கனவே, வறுமையில் இருந்த அவரது குடும்பத்துக்கு, சேகர் மறைவு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம், கருணை அடிப்படையில் அரசு பணிக்கு, அந்த மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. அதை, முதல்வர், முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X