பொது செய்தி

தமிழ்நாடு

பெண் எஸ்.ஐ., உள்பட 12 போலீசுக்கு தொற்று: ஓமலூரில் 2 ஸ்டேஷன் மூடல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஓமலூர்: ஓமலூரில், பெண் எஸ்.ஐ., உள்பட, 12 போலீசாருக்கு தொற்று உறுதியானதால், இரு போலீஸ் ஸ்டேஷன்கள் மூடப்பட்டன.
அரக்கோணத்தைச் சேர்ந்த, 54 வயது வக்கீல், கடந்த, 20ல், வழக்கு தொடர்பாக, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., - டி.எஸ்.பி.,யை சந்தித்து, ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிவிட்டு சென்றார். முன்னதாக, அவர் ரயில்வே ஸ்டேஷனில் எடுத்துக்கொண்ட பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதியானது. இதனால், மறுநாள் முதல், ஓமலூர் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், ஸ்டேஷனில் பணிபுரிந்த, தர்மபுரியைச் சேர்ந்த எஸ்.ஐ.,க்கு, தொற்று உறுதியானது. இதனால், மற்ற போலீசாருக்கு, நேற்று முன்தினம், கருப்பூர் மையத்தில் மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர்கள், போலீசார் என, ஏழு பேர், மகளிர் ஸ்டேஷனில் எஸ்.ஐ., உள்பட, 5 போலீசாருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகம் முழுதும், வட்டார மருத்துவ அலுவலர் ரமணன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷன், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டன.

மேலும் 7 பேர் பாதிப்பு: ஓமலூர், செல்லப்பிள்ளைகுட்டையில், சில நாளுக்கு முன், சென்னையிலிருந்து வந்த பெண்ணுக்கு, தொற்று உறுதியானது. அவர் தங்கியிருந்த வீட்டைச் சுற்றியுள்ள, 15 பேருக்கு, நேற்று முன்தினம் பரிசோதனை நடந்தது. அதில், ஏழு பேருக்கு தொற்று இருப்பது, நேற்று உறுதியானது. பின், அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X