பொது செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் 'செல்பி' எடுத்தால் நடவடிக்கை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

வீரபாண்டி: தண்டவாள பகுதியில், 'செல்பி' எடுத்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே போலீசார், மக்களுக்கு எச்சரிக்கை செய்து, தொலைபேசி எண்களுடன், முக்கிய ரயில்வே கேட்டுகளில், அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதன்படி, கொண்டலாம்பட்டி அருகே, புத்தூர் அக்ரஹாரம் ரயில்வே கேட்டில் வைத்துள்ள எச்சரிக்கை பலகையில், தண்டவாளங்களில் மது அருந்துவது, 'செல்பி' எடுப்பது, கற்களை வைத்து விளையாடுவது உள்ளிட்ட செயலில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் குறித்து, 0427 - 2447404, 94981 - 01936 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X