ரூ.19 கோடியில் குழாய் பதிக்க இன்று அடிக்கல் நாட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.19 கோடியில் குழாய் பதிக்க இன்று அடிக்கல் நாட்டு விழா

Added : ஜூன் 28, 2020
Share

ஆத்தூர்: மேட்டூர் - ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு, காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதில், ஆத்தூர் - நரசிங்கபுரம் நகராட்சிகள் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், அம்மாபேட்டை முதல், மேட்டுப்பட்டி வரை உள்ள நீரேற்று நிலைய பகுதியில், சிமென்ட் குழாய் பதித்து, 30 ஆண்டானது. இதனால், அதை அகற்றிவிட்டு, புதிதாக குழாய் பதிக்க, முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேட்டுப்பட்டி நீரேற்றும் நிலைய பகுதியில், 11.4 கி.மீ., தூரத்துக்கு, 70 செ.மீ., விட்டம் உள்ள இரும்பு குழாய் பதிக்க, 19.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. மேட்டுப்பட்டியில், இன்று மதியம், 12:45 மணிக்கு, குழாய் பதிக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து, 1:30 மணிக்கு, தலைவாசல், கால்நடை பூங்கா கட்டுமானப்பணியை, முதல்வர் பார்வையிட்டு, சென்னைக்கு காரில் புறப்படுவார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X