பொது செய்தி

தமிழ்நாடு

12 பேரை ஊருக்குள் அனுமதிக்காத மக்கள்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: கொரோனா பரிசோதனை செய்த, 12 பேரை கிராம மக்கள் ஊருக்குள் அனுமதிக்காததால், அவர்கள் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த, திம்மாவரத்தை சேர்ந்த, 30 வயதுள்ள, 12 பேர் சென்னையில் துணிக்கடையில் பணிபுரிந்தனர். கடந்த, 22ல் அவர்கள் திருப்பத்தூர் வந்தனர். அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொற்று இல்லை என நேற்று முன்தினம் சான்றிதழ் கிடைத்தது. இதனால் அவர்கள், திம்மாவரத்துக்கு நேற்று வந்தனர். கிராம மக்கள் அவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுத்தனர். திருப்பத்தூர் போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், ஊருக்குள் அனுமதிப்போம் என, கிராம மக்கள் கூறினர். இதனால், கந்திலி அரசு பள்ளியில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X