பொது செய்தி

தமிழ்நாடு

ஏலகிரிமலையிலும் பரவியது கொரோனா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: சுற்றுலாத்தலமான ஏலகிரிமலையில், கொரோனா பரவியதால், சுற்றுலா வந்தவர்கள் ஓட்டலை காலி செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை சுற்றுலா தலமாக உள்ளது. மலையிலுள்ள புத்தூர் பகுதியை சேர்ந்த, 25 வயது ஆண் சென்னை தாம்பரத்தில் துணிக்கடையில் பணியாற்றி வந்தார். கடந்த, 30ல் அவர் சொந்த ஊருக்கு திரும்பினார். சொந்த வேலையாக சில நாட்களுக்கு முன் அவர், வாணியம்பாடி சென்றபோது, கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனால் அவர், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுகாதாரத்துறையினர், ஏலகிரிமலை முழுவதும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலாவுக்கு வந்தவர்கள், ஓட்டலை காலி செய்து விட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X