சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவர் கைது

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: திருப்பத்தூரில், மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர், தியாகி சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர், சேஷாச்சலம், 65; நகை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி மல்லிகா, 60; இவர்களுக்கு, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து, வெளியூர்களில் வசிக்கின்றனர். மல்லிகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த, 14 ஆண்டுகளாக ஒரே வீட்டுக்குள் இருவரும் பேசாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மல்லிகாவை பார்க்க, வாலிபர் ஒருவர் வந்து சென்ற தகவல் அறிந்த, சேஷாச்சலம் ஆத்திரமடைந்தார். அன்றிரவு, 10:00 மணிக்கு, தூங்கிக்கொண்டிருந்த மல்லிகா மீது, பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். படுகாயமடைந்த மல்லிகாவை, அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். புகாரின்படி, திருப்பத்தூர் போலீசார், கணவர் சேஷாச்சலத்தை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X