ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் கொரோனாவை குணமாக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் கொரோனாவை குணமாக்கலாம்'

Added : ஜூன் 28, 2020
Share

வேலூர்: ''ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம், ஏழு முதல், 14 நாட்களில் கொரோனா குணமாகும்,'' என, கேரளா துணை மருத்துவ கண்காணிப்பாளர் காட்வின் பேசினார்.


ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம், கொரோனாவை குணப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கேரளா ஆயுர்வேத நிறுவன துணை மருத்துவ கண்காணிப்பாளர், காட்வின் பேசியதாவது: கொரோனா, 'பாஸிடிவ்' என இருந்தால், அதை ஆயுர்வேத மருந்துகளால், மூன்று நிலைகளில் குணப்படுத்தலாம். முதல்நிலையில் இருப்பவர்கள், அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு, சாதாரண மருந்தின் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இரண்டாம் நிலையில், அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, இரண்டு, மூன்று மருந்துகள் கொடுத்து, ஏழு முதல், 14 நாட்களுக்கள் குணப்படுத்தலாம். மூன்றாம் நிலையில், மூச்சுத்திணறல் இருந்தால், அதற்கும் மருந்துகள் உள்ளன. கொரோனா வந்து குணமானவர்களுக்கு, மீண்டும் வராமல் இருக்கவும், மருந்துகள் உள்ளன. வெதுவெதுப்பான நீரில் துளசி, மஞ்சள் தூள், வெல்லம், இஞ்சி, பூண்டு சேர்த்து டீ போல தினமும், காலை, மாலை குடிக்கலாம். இதனால், சளி குறைந்து நுரையீரலுக்கு சக்தி அதிகரிக்கும். சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்தால் சளி குறையும். இவற்றை பயன்படுத்தினால், கொரோனா வராமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X