பொது செய்தி

தமிழ்நாடு

'?கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க முதல்வரிடம் கோரிக்கை'

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

வேலூர்: ''வேலூர் மாவட்டத்தில், கொரோனா அதிகரிப்பதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க, முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் வீரமணி கூறினார்.


வேலூர் அருகே, காட்பாடி அடுத்த ஆரிமுத்தூர் மோட்டூரில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 24 கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்ட பசுமை வீடுகள் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், கொரோனா அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் அதிகமாக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே, அரசும், மாவட்ட நிர்வாகமும் கூறும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறினால், தொற்றை ஒழிப்பதில் சிரமம் ஏற்படும். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும். இந்த மூன்று மாவட்டங்களிலும், கொரோனா நோயாளிகளுக்கு, அதிகளவு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வேலூர் முழுவதும், கட்டுக்குள் இருந்த கொரோனா, சென்னையிலிருந்து வந்தவர்களால் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X