பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத 105 பேருக்கு அபராதம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

தர்மபுரி: ஊரடங்கில், சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. இதனால், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, தளர்வுகள் விலக்கப்பட்டு, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறை சார்பில், தனி தாசில்தார் ராஜசேகரன் தலைமையில், தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜகோபால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் குழுவினர், இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை பென்னாகரம் சாலையில், இக்குழுவினர் சோதனை செய்தனர். இதில், டூவீலர்களில் முகக்கவசம் அணியாமல் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், 105 பேருக்கு, தலா, 100 ரூபாய் அபராதம் விதித்து, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X