பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு வழங்காமல் சாலை பணி: விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

தர்மபுரி: இழப்பீடு வழங்காமல் சாலை அமைக்க பூர்வாக பணிகள் துவங்கிய தேசிய நெடுஞ்சாலைத் துறையினரை கண்டித்து, விவசாயிகள் நிலங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூரிலிருந்து, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை வரை, புதிய தேசிய நான்குவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்காக இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு, உரிய விலை நிர்ணயம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் விவசாயிகள் மனு கொடுத்ததுடன், இது தொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், தர்மபுரி அடுத்த விருப்பாச்சிபுரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் திடீரென, சாலை அமைக்க, விவசாய நிலங்களில் மீண்டும் கற்களை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று தங்களது குடும்பத்தினருடன் விவசாய நிலங்களில் அமர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், இது தொடர்பான மனுவை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள், கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X