சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு திருமணம்: வாலிபருக்கு 'போக்சோ'

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவர், அங்குள்ள அரசுப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 16ல் வீட்டிலிருந்து, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இதில், மாணவி பென்னாகரம் அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்த சுரேஷ், 35 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டு தலைமறைவானது தெரிந்தது. இந்நிலையில், ஏரியூரில் பதுங்கியிருந்த சுரேஷ், பாப்பாரப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவர், போக்சோவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X