சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோவில் தாய் உட்பட 3 பேர் கைது

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த, அவரது தாய் உட்பட, மூன்று பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி, வி.ஜெட்டிஹள்ளி சோகத்தூர் பைபாஸ் சாலை அருகே வசித்து வருபவர், 36 வயது பெண். இவர், அப்பகுதியில் உள்ள நூல் மில்லில் பணியாற்றி வந்தார். ஒரு சில நேரத்தில், அப்பெண், தன், 16 வயது மகளையும் மில்லுக்கு அழைத்து செல்வது வழக்கம். அப்போது, நூல் மில் உரிமையாளர் கணபதியின் மகன் பெரியசாமி, 32, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமி தன் தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர், பெரியசாமியின் ஆசை வார்த்தைக்கு இணங்கி, கடந்த ஜன., 23ல், தன், 16 வயது மகளை, பெரியசாமிக்கு, இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு, சிறுமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை, வீட்டில் அடைத்து வைத்து, பெரியசாமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டை விட்டு தப்பிய சிறுமி, இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து, சிறுமியின் தாய் மற்றும் குழந்தை திருமணத்துக்கு உதவிய வி.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த கணபதி, 57, அவரது மனைவி கந்தம்மாள், 53 ஆகிய, மூவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெரியசாமி மற்றும் அவரது உறவினர் கனகா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X