குடிநீர் கிடைக்காமல் அவதி: கிராம மக்கள் வேதனை| Dinamalar

குடிநீர் கிடைக்காமல் அவதி: கிராம மக்கள் வேதனை

Added : ஜூன் 28, 2020
Share

அரூர்: அரூர் அருகே, போதியளவில் குடிநீர் கிடைக்காமல், அவதிப்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட தாமலேரிப்பட்டியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், போதியளவில் குடிநீர் கிடைக்காமல், அவதிப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: தாமலேரிப்பட்டியில் வசிக்கும் மக்களுக்கு, நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. மின்மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால் தற்போது, ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து மட்டும் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் வருகிறது. மேலும், கடந்த, 15 நாட்களுக்கு மேலாக, ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், கிராம மக்கள் குடிநீரை விலைக்கு வாங்குவதுடன், அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று, தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே, பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைப்பதுடன், ஒகேனக்கல் குடிநீரை தட்டுப்பாடின்றி. தினமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X