பாதாள சாக்கடையில் அடைப்பு; தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், பொதுமக்கள் மற்றும் இப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி நகராட்சியின், 33 வார்டிலும் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வரும் கழிவுநீர், மதிகோண்பாளையத்திலுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. இந்நிலையில், தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பழைய திருப்பத்தூர் சாலையில், கடந்த மூன்று நாட்களாக, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள ஓட்டல், மளிகை, மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள், துர்நாற்றத்தால் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்களின் நலன்கருதி, அடைப்பு ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X