நீர்நிலையை ஆக்கிரமித்து சாலை; அகற்ற ஆர்வம் காட்டாத அதிகாரிகள்| Dinamalar

நீர்நிலையை ஆக்கிரமித்து சாலை; அகற்ற ஆர்வம் காட்டாத அதிகாரிகள்

Added : ஜூன் 28, 2020
Share

தர்மபுரி: நீர் நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சாலையை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி, உங்குரானஹள்ளி, தின்னப்பட்டி, மாதேமங்கலம் வழியாக, ஈச்சம்பள்ளம் ஆறு, அன்னாசகரம் சனத்குமார் நதியில் இணைக்கிறது. இந்நிலையில், தர்மபுரி எட்டிமரத்துப்பட்டி சாலையோரத்தில், மேல்காரஓனி, கீழ்காரஓனி பகுதியில், ஈச்சம்பள்ளம் ஆற்று வழிப்பாதையில், சிலர் அனுமதியின்றி மண் சாலை அமைத்தனர். இதுகுறித்து, பொதுமக்கள், தர்மபுரி ஊரகத்துறை மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் எம்.பி., தாமரைச்செல்வன், இது குறித்து, கலெக்டர் மலர்விழியிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை ஆற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால், அந்த பகுதியில் மீண்டும் சாலை பணி தொடரும் வாய்ப்புள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுக்க, ஆற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மண் சாலையை அகற்றி, ஆற்றின் கரையை அகலப்படுத்த வேண்டும் எனவும், ஆற்றை ஆக்கிரமித்து சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X