பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர் பகுதி விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என, ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருந்திய பிரதம மந்திரி பசல்பீமா யோஜனா திட்டமானது, மாநில அரசின் மானியத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நடப்பாண்டு, காரிப் மற்றும் ரபி பருவத்தில் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. இத்திட்ட நோக்கம், நோய், வறட்சி, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் பாதிக்கப்பட்டால், விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது, விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க செய்து, அவர்களை தொடர்ந்து விவசாயத்தில் நிலை பெற செய்வது. மேலும், நவீன வேளாண் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல் மற்றும் விவசாயிகளை உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாப்பதுடன், உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுக்கு தொடர்ந்து கடனுதவி கிடைப்பதை உறுதிபடுத்தி, வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகும். வருவாய் கிராமம் மற்றும் பிர்கா அளவில் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் (குத்தகை விவசாயிகள் உள்பட) இத்திட்டத்தில் இணைய முடியும். பயிர்கடன், விவசாய நகைக்கடன் பெறும் அனைத்து விவசாயிகளும் சேரலாம். மேலும், பயிர் கடன் பெறாத விவசாயிகளும், விருப்பத்தின் பேரில் இணைய முடியும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், காப்பீட்டு தொகையில், 2 சதவீதத்தை பிரிமியமாக செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகையை பொருத்து, ஏக்கருக்கு, 9,300 முதல், 33 ஆயிரம் ரூபாய் வரை நஷ்ட ஈடாக பெற முடியும். மேலும் விபரம் அறிய, அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X