பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஓசூர்: கெலமங்கலம் அடுத்த, நெருப்புக்குட்டை கிராமத்தில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணியாக கிருமி நாசினி தெளிக்க, மாவட்ட கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தினார்.
ஓசூர் அருகே, மத்திகிரி அரசு கால்நடை பண்ணை வளாகத்தில், ஆறு கோடியே, 74 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிதாக நாட்டின கோழி இனப்பெருக்க வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பிரபாகர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். நாட்டின கோழி குஞ்சு பொறிக்கும் ஆய்வகம் மற்றும் குதிரைகளின் கொட்டகைகளை பார்வையிட்ட அவர், கொட்டைகைகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அத்துடன், 1.06 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும், பொலிக்காளை கொட்டகை பணிகளை ஆய்வு செய்து, விரைவாக முடிக்க உத்தரவிட்டார். கெலமங்கலம் ஒன்றியம், போடிச்சிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட நெருப்புக்குட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, கொரோனா தொற்று சமீபத்தில் உறுதியானதால், அக்கிராமம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நெருப்புக்குட்டை கிராமத்துக்கு நேரில் சென்று, கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்த, மாவட்ட கலெக்டர் பிரபாகர், கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தினார். அதேபோல், கெலமங்கலம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியில், டெங்கு மற்றும் தூய்மை பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, தளி ஒன்றியம், அரசகுப்பம் பஞ்.,க்கு உட்பட்ட திம்மசந்திரம் கிராமத்தில் உள்ள அனந்தப்பன் குட்டையை, 6.11 லட்சம் ரூபாய் மதிப்பில், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், துணை இயக்குனர் புகழேந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X