பொது செய்தி

தமிழ்நாடு

தாய், மகள்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மட்டும், தாய், மகள்கள் உட்பட, 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தொற்று வேகமாக பரவியபோது, பச்சை மண்டலமாக இருந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது, மற்ற மாவட்டங்களுக்கு இணையாக கொரோனா தொற்று பரவி வருகிறது. வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களது தொடர்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 100ஐ கடந்து விட்டது. நாளுக்கு, நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஓசூரில் உள்ள, தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும், ஜீவா நகரை சேர்ந்த, 32 வயது ஆண், சஸ்டி அவன்யூவை சேர்ந்த, 42 வயது ஆண், துவாரகா நகரை சேர்ந்த, 43 வயது பெண்ணுக்கும், அவர் மூலம் அவரது, 11 மற்றும் ஒன்பது வயது மகள்களுக்கும் மற்றும் ஓசூர் கே.சி.சி., நகரை சேர்ந்த பெண் மூலம், அவரது நான்கு வயது மகனுக்கும், கொரோனா பரவி இருப்பது நேற்று உறுதியானது. மேலும், ஐதராபாத்தில் இருந்து திரும்பிய, பர்கூரை சேர்ந்த, 37, 35, 26, 25, 35 வயது ஆண்களுக்கும், பெங்களூருவில் இருந்து வந்த, சிங்காரபேட்டை அடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்த, 27 வயது ஆணுக்கும், சென்னையிலிருந்து தளி அடுத்த பேலகொண்டப்பள்ளிக்கு வந்த, 34 வயது ஆணுக்கும் என, மொத்தம் நேற்று மட்டும், 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மற்றும் ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X