பர்கூரில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பர்கூரில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

Added : ஜூன் 28, 2020
Share
கிருஷ்ணகிரி: பர்கூர் நகரில், மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, 15 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அத்தியாவசியமற்ற கடைகள் அடைக்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் நகரில், ஐதராபாத்தில் இருந்து வந்த மூன்று ஆண்களுக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவர்கள் ஐவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வசித்து

கிருஷ்ணகிரி: பர்கூர் நகரில், மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, 15 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அத்தியாவசியமற்ற கடைகள் அடைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் நகரில், ஐதராபாத்தில் இருந்து வந்த மூன்று ஆண்களுக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவர்கள் ஐவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பர்கூர் நகரில் மேற்கொண்டு கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, நேற்று காலை, 10:00 மணி முதல், அடுத்த, 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாசில்தார் சித்ரா தலைமையிலான அதிகாரிகள், கடைகளை அடைக்க வியாபாரிகளை அறிவுறுத்தினர். மாவட்டத்திலேயே, பர்கூரில்தான், 2,000க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா போன்ற பெரிய மாநிலங்களுக்கு ஆடைகளை அனுப்புவதில், பர்கூர் முதன்மையாக திகழ்கிறது. ஆனால், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், நேற்று முதல் ஜவுளிக்கடை மற்றும் அத்தியாவசியமற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சத்தலப்பள்ளி, பி.ஆர்.ஜே., மாதப்பள்ளி, மிட்டப்பள்ளி ஆகிய கிராமங்களிலும், 15 நாட்கள் ஊராடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்திருந்த, ஜவுளி வியாபாரிகள் மற்றும் இதர கடை உரிமையாளர்கள், சமீபத்தில் தான் கடைகளை திறந்து, வியாபாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பர்கூரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X