ஆவின் பால் விற்பனை முகவர்களுக்கு கமிஷனை உயர்த்தி வழங்க தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் பால் விற்பனை முகவர்களுக்கு கமிஷனை உயர்த்தி வழங்க தீர்மானம்

Added : ஜூன் 28, 2020
Share
கிருஷ்ணகிரி: ஆவின் பால் விற்பனை முகவர்களுக்கு கமிஷனை உயர்த்தி வழங்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.கிருஷ்ணகிரியில், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டம் நடந்தது. சங்க ஆலோசகர் நசீர்அகமது தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ராமகவுண்டர் பேசினார். கூட்டத்தில், ஆவின் பால் விற்பனை முகவர்களுக்கு, ஒரு

கிருஷ்ணகிரி: ஆவின் பால் விற்பனை முகவர்களுக்கு கமிஷனை உயர்த்தி வழங்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கிருஷ்ணகிரியில், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டம் நடந்தது. சங்க ஆலோசகர் நசீர்அகமது தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ராமகவுண்டர் பேசினார். கூட்டத்தில், ஆவின் பால் விற்பனை முகவர்களுக்கு, ஒரு லிட்டருக்கு, ஒரு ரூபாய், 60 பைசா மட்டுமே கமிஷன் வழங்கப்படுகிறது. கர்நாடகா அரசின் அதிகாரம் பெற்ற நந்தினி பால் நிர்வாகம், லிட்டர் பாலுக்கு, நான்கு ரூபாய் கமிஷன் வழங்குகிறது. தமிழகத்தில், தனியார் பால் கம்பெனிகள் முகவர்களுக்கு கமிஷனாக, நான்கு முதல், ஆறு ரூபாய் வரை வழங்குகிறது. இதனால், பால் முகவர்கள் அதிக கமிஷன் கொடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு பாலை விற்பனை செய்கின்றனர். எனவே, ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க, விற்பனை முகவர்களுக்கு, கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் பாக்கெட் கெட்டுவிட்டால், அதை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஓட்டை விழுந்த பால் பாக்கெட்டுகளை கழித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகவர்கள் அதிகளவில் பாலை விற்பனை செய்வார்கள். அதன் மூலம் பால் உற்பத்தியும் அதிகரிக்கும். எனவே, அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X