பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., அலுவலக உதவியாளர் உட்பட 4 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி, ஆர்.டி.ஓ., அலுவலக உதவியாளர் உட்பட, நான்கு பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர்கள், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகஹள்ளியை சேர்ந்தவர், 42 வயது வாலிபர். இவர், தர்மபுரி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, இரு நாட்களாக உடல்நிலை பாதிப்பால், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். இதில், அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதையடுத்து அவர், தர்மபுரி, கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் அவர் வசித்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோன்று, ஆந்திராவிலிருந்து தர்மபுரி பாரதிபுரம் வந்த, 35 வயது பொறியாளர், சென்னையிலிருந்து கீழ்மசூதி தெருவுக்கு வந்த, 26 வயது கூலித்தொழிலாளி, பெங்களூருவில் இருந்து கெட்டுப்பட்டிக்கு வந்த, 31 வயது தனியார் நிறுவன பணியாளர் ஆகியோருக்கும் நேற்று முன்தினம், கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தில், நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X