பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பலி 3 ஆக உயர்வு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கொரோனா பலி, மூன்றாக உயர்ந்தது. ஈரோடு மாநகராட்சி வளையக்கார வீதி, அகத்தியர் வீதி, கண்ணகி வீதி, சம்பத் நகர், வி.வி.சி.ஆர்., நகர், திருநகர் காலனி, பாலசுப்பிரமணிய வீதி உட்பட பல இடங்கள், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஈரோடு, கருங்கல்பாளையம் திருநகர் காலனி, பாலசுப்பிரமணிய வீதியில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 23ல் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெண்ணுக்கு தொற்று உறுதியானது. அடுத்த இரு தினங்களில் கணவருக்கும், 58, தொற்று உறுதியானது. மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று இறந்தார். திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளியான இவர், அங்கு வேலைக்கு சென்று வந்த நிலையில், தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X