பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 6க்கு பின் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்: அமைச்சர் தகவல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கோபி: ''முதல்வரின் அனுமதி பெற்று, ஜூலை, 6ம் தேதிக்கு பின், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்,'' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: கொரோனா சூழலில் மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி போதிப்பது என்பது குறித்து, இதற்காக அமைக்கப்பட்ட குழுவை சந்தித்து ஆலோசிக்கப்படும். எவ்வாறு மாணவர்களுக்கு, கல்வியை கொண்டு செல்வது, கல்வி தொலைக்காட்சி மூலம் எந்த நேரத்தில் போதிப்பது என்ற விபரங்கள் பட்டியலிடப்படும். இதற்காக நான்கு சேனல்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும், மாவட்டம் வாரியாக அனுப்பி, அங்கிருந்து பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. ஜூன்,30ம் தேதிக்குள், அனைத்து பள்ளிகளிலும், பாடப்புத்தகங்கள் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில், பள்ளிக்கு வரவழைத்து, சமூக விலகலுடன், பாடப்புத்தகங்கள் வழங்கலாமா என ஆலோசித்து வருகிறோம். ஜூலை,6ம் தேதிக்கு பின், முதல்வரின் அனுமதி பெற்று, பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X