பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஆர்.ஓ., ஆபீஸ் ஊழியருக்கு கொரோனா: ஈரோடு கலெக்டர் ஆபீஸ் 4வது தளத்துக்கு 'சீல்'

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு பி.ஆர்.ஓ., அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கலெக்டர் அலுவலக நான்காம் தளம், 'சீல்' வைக்கப்பட்டது.
ஈரோடு கலெக்டர் அலுவலக, நான்காவது தளத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பி.ஆர்.ஓ., - ஏ.பி.ஆர்.ஓ.,க்கள் உட்பட, 18 ஊழியர்கள் பணி செய்கின்றனர். இந்த அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, ஈவெ.ரா.,- அண்ணாத்துரை நினைவு இல்லத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த, 35 வயது ஆணுக்கு, கடந்த, 22ல் காய்ச்சல் ஏற்பட்டு, மாநகராட்சி சார்பில் நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பி.ஆர்.ஓ., அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் மாலை, பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று காலை ரிசலட் அறிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவருக்கும், 'நெகட்டிவ்' என தெரியவந்தது. இதனால், அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வார காலம் தனிமையில் இருக்க சுகாதாரத்துறை யோசனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதே தளத்தில், பி.ஆர்.ஓ., அலுவலகத்தின் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக ஊழியர்கள், அத்தளத்துக்கு பல்வேறு பணியாக வந்து செல்லும் அலுவலர்களுக்கு நேற்று காலை, பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டது. அத்தளத்தில் உள்ள அனைத்து அலுவலகத்திலும் கிருமி நாசினி தெளித்து, அத்தளத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் இருந்து, ஏழு தளத்துக்கும் செல்ல இரண்டு லிப்ட் வசதி உள்ளது. இந்த லிப்ட்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டு, அனைவரும் நடந்து சென்று வருகின்றனர். நேற்று சனிக்கிழமை என்பதால், கலெக்டர் அலுவலகத்துக்கு எந்த துறை அதிகாரிகளும் வரவில்லை. நேற்றும், இன்றும் அனைத்து தளங்களிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து, வரும் திங்கள் முதல் வழக்கமான பணி துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X