பொது செய்தி

தமிழ்நாடு

கீழே கிடந்த 'மாஸ்க்'கை பயன்படுத்தியதால் 5 பேருக்கு 'கொரோனா'

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

வேலூர்: காட்பாடியில், கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்திய வாலிபரால், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வேலூர், காட்பாடி, சிவராஜ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு, கடந்த, 22ல் கொரோனா உறுதியானது. அனைவரும், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவியது குறித்து, சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில், 20 வயதான வாலிபர் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக போலீசார் ரோந்து வந்துள்ளனர். அபராதம் விதிப்பர் என போலீசாருக்கு பயந்த வாலிபர், அங்கு, கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார். வீட்டிற்கு சென்ற அவரால், வீட்டிலிருந்த அவரது பெற்றோர், தம்பி, தங்கைக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற விபரம், அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X