தமிழ்நாடு

ரூ.1000 நிவாரணம் வழங்குவதில் காற்றில் பறக்குது சமூக இடைவெளி

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

மதுரை:மதுரையில் ரூ.1000 கொரோனா நிவாரணம் பெற மக்கள் கூடுவதால் பல இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவு காற்றில் பறந்து கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் கொரோனா நிவாரணம் ரூ.1000 வீடு வீடாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பல இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினர். சம்மட்டிபுரம், திருமலைக்காலனி, வில்லாபுரம், முந்திரித் தோப்பு, அண்ணாநகர், செல்லுார் உட்பட பல இடங்களில் மக்கள் கூட்டமாக சென்று முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அனுப்பானடி, விராட்டிபத்து உள்ளிட்ட பல இடங்களில் குறிப்பிட்ட இடத்திற்கு மக்களை வரச்சொல்லி தொகை வழங்கினர். நிவாரணம் வழங்கிய பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. பலர் முகக்கவசம் அணியாமல் கூடினர். அண்ணாதோப்பு உட்பட சில இடங்களில் கூட்டத்தை பார்த்த பெண் ஊழியர்கள் கொரோனா அச்சத்தால் பாதியில் சென்றனர்.ரேஷன் கடை ஊழியர்கள்கூறுகையில், 'ஆயிரம் கார்டுகள் வரை இரண்டு பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. ஒரு தெருவிற்குள் சென்றால் அனைவரும் கூடி விடுகின்றனர். ஒன்றும் செய்ய முடியவில்லை' என்றனர்.வீடு தேடி வரும் பணம்அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜூன் 29 வரை நிவாரணம் வழங்கப்படும். மக்கள் வீட்டிலேயே இருங்கள். பணம் தேடி வரும். கிடைக்காதோர் ஜூன் 29க்கு பின் ரேஷன் கடைக்கு சென்று பெறலாம். கூட்டமாக வெளியே வந்து நிவாரணம் வாங்குகிறோம் என்ற கொரோனாவை வாங்க வேண்டாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X